Posts

Showing posts from July, 2020

தமிழும் ஆங்கிலமும்

பனிரெண்டாம் வகுப்பு வரை தமிழ் மீடியம். சென்னை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த போது, கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல உணர்ந்தேன்.  புதிய நகர்ப்புற சூழல், ராக்கிங் கொடுமை. இவற்றோடு திரும்புகிற பக்கமெல்லாம் இங்கிலீஷ். இங்கிலீஷ் தான் பயிற்று மொழி, பேச்சு மொழி, நக்கல் மொழி, சிரிப்பு மொழி எல்லாம். அதிர்ச்சியிலிருந்து மீள ஓரிரு வாரங்கள் ஆனது. என்னைப் போலவே சுமார் 25-30 பேர் முகத்திலும் தமிழ் மீடியம் என்று ஸ்டிக்கர் ஒட்டி இருந்தது. எங்களுக்கு முதலாமாண்டு படிப்பு கடினமாகவும் சற்று பயமுறுத்துவதாகவும் இருந்தது. நண்பர்கள், சீனியர்கள் பெரும் உதவியாக இருந்தார்கள். நோட்ஸ்களை கொடுத்து உதவினார்கள். இரண்டாமாண்டு முதல் இறுதியாண்டு வரை ஆங்கிலம் ஒரு பிரச்சினையாக இருக்கவில்லை. அனைத்து தமிழ் மீடிய நண்பர்களும் முதல் தடவையிலேயே இறுதியாண்டுத் தேர்வில் தேர்ச்சி அடைந்தோம்.  *** ஆரம்பக்கல்வியை தமிழில் படித்தது, பாடங்களை புரிந்துகொண்டு உள்வாங்கிக் கொள்ள பேருதவியாக இருந்ததை பின்னாளில் உணர்ந்து கொண்டேன். அடித்தளத்தை தாய்மொழியில் அமைத்துக் கொள்வது மேலேறுவதற்கு உதவும் முக்கியமான காரணி என்பதில் மாற்றுக் கருத்த...

மனம்

#பொறுமை..... மனமானது குழப்பத்திலிருக்கும்போது அதை அதன் போக்கிலேயே விடுங்கள், சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளிவடையும். சிறிது நேரம் பொறுமையாக இருங்கள், மனதை அமைதிப்படுத்த எந்த ஒரு செயலையும் கடினப்பட்டு செய்ய வேண்டியதில்லை. அது தானாக அமைதியடையும். பின்னர் எடுக்கும் முடிவே சரியாக இருக்கும். பொறுமையே மனதினைப் பக்குவப்படுத்தும்'.. ஒருநாள் புத்தர் தனது சீடர்களுடன் அருகே உள்ள ஊருக்கு நடந்து சென்றுகொண்டிருந்தார். அந்த ஊருக்குச் செல்ல ஓர் ஆற்றைக் கடக்க வேண்டும். வெகு தூரம் நடந்து வந்ததால், ஆற்றங்கரையை அடைந்தபோது, அனைவரும் களைபுற்றிருந்தனர். அதனால், சிறிது நேரம் இளைப்பாறி விட்டு செல்ல முடிவு செய்த புத்தரும் சீடர்களும் ஆற்றங்கரை அருகே, ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்தனர். அப்போது, புத்தர் தனக்கு மிகவும் தாகமாக இருப்பதாகவும், ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துவரும்படியும் ஒரு சீடரை அனுப்பி வைத்தார். உடனே ஆற்றைநோக்கி விரைந்தார் சீடர், அப்போதுதான் அவருக்கு முன்பாக ஒரு மாட்டு வண்டி ஆற்றைக் கடந்துகொண்டிருந்தது. அதனால் ஆற்று நீர் கலங்கியிருந்தது. இது சீடருக்குத் தெரியாது. தண்ணீர் கலங்கி இருந்தது ...

புத்தருக்கும் நாமம்

பூமியில் ஆதி முதல் அந்தம் வரை நிகழும் மாற்றங்களை நமது முன்னோர் பதிவு செய்துள்ளனர். அதை வைணவம் தனது மத வளர்ச்சிக்கு விஷ்ணுவின் அவதாரமாக பொருந்தாக் கதைகளைச் சொல்லியது, ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு யுகத்தில் நடந்ததாக கூறப்படும் கதையில் பலராமனும் கிருஷ்ணனும் ஒரே கதையில் வருகின்றனர். பரசுராமனும் மஹாபாரதத்தில் வருகிறார். ஆயர் குல பலராமருக்கு ஏர்கலப்பை எதற்கு?. தொன்மைச்சான்றாக கி.பி 4ம் நூற்றாண்டின் விஷ்ணுபுராணத்தில் 9ம் இடத்தில் கிருஷ்ணனை தவிர்த்து புத்தரே சொல்லப்படுகிறார். 6ம் நூற்றாண்டின் பல்லவ கவெட்டிலும் 9ம் இடம் புத்தருக்கே, ஆந்திராவில் சாளுக்கிய கால தசாவதார புடைப்புச்சிற்பத் தொகுதியிலும் புத்தருக்கே இடம், சில்பரத்னம் எனும் சிற்பநூலிலும் புத்தரின் த்யான சுலோகமே கூறப்பட்டுள்ளது. நாமம் போட்டு வைணவத்தில் சேர்ப்பது புரட்டு வேலை, நாமம் நமக்கு போடமுயற்சிக்கின்றனர்

சாதிய கட்டமைப்பு

நேற்றைக்கு இருவேறு முகநூல் நண்பர்களுடன் பேச வாய்த்தது. நமது மனம் எப்படிச் சாதிய மனமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதைக் புரிந்து கொள்ள அந்த உரையாடல்கள் வாய்ப்பாக அமைந்தன.  சம்பவம்: 1 ................... மாரியம்மன் வழிபாட்டைப் பற்றிய நெடிய தொலைபேசி உரையாடல். நானறிந்த பலசெய்திகளைச் சொல்லிக் கொண்டிருந்தேன். முக்கியமாக, எதனால் மாரியம்மன் வழிபாடு கொங்கு மண்டலத்தில் பரவலாக இருக்கிறது என்றும் கொங்கு வேளாளர்களால் மிக அதிகமாகக் கொண்டாடப்படுகிறது என்றும் விளக்கிக் கொண்டிருந்தேன். தம்பி சொன்னார் "நாம தாங்ணா நம்ம பண்பாட்டக் கட்டிக் காப்பாத்தறதோட அடுத்த தலைமுறைக்கும் கடத்தறோம்". குரலில் பெருமிதம் பொங்கி வழிந்தது. ஏதேது நாமா? "நீங்க சொல்றது புரியலையே தம்பி கொஞ்சம் விளக்கமாச் சொல்லுங்க. நாமன்னா யாரு?".  "ஆயிரஞ் சாதிக்காரன் கொங்கு நாட்ல இருந்தாலும் நாம தானுங்ணா நம்ம கலாச்சாரத்க் கொண்டாடறவங்க? நாம தானண்ணா அடுத்த தலைமுறைக்கு நம்ம பண்பாட்டைக் கையளிக்கறவங்க! அதத் தான் சொன்னேன்" என்றார் தம்பி.  சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தம்பி விவரமானவர். அவரே இப்படி இருக்கிறாரே என்று ...

அறிஞர் தொ. பரமசிவன் மற்றும் வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார்

அறிஞர் தொ.பரமசிவன் அவர்களின்  'டங்கல் எனும் நயவஞ்சகம்' எனும் சிறு நூல் நம்மாழ்வார் ஐயா பேசுவதை எதிரொலித்தது. நம்மாழ்வார் ஐயா வேளாண்மையின் வேர்களைத் தேடியவர் என்றால் தொ. பரமசிவன் இந்த மக்களின் வேர்களைத் தேடியவராக இருக்கிறார். இருவருடைய பாதையும் வேறு வேறு. ஆனால் பயணம் ஒரே இலக்கை நோக்கியது. சுவரில்லா கல்வி வேண்டும் என நம்மாழ்வார் ஐயா சொல்கிறார். வட்டார கல்வி வேண்டும் என தொ. ப சொல்கிறார். உலகமயமாக்கல் தீது என தொ. பரமசிவன் கூறுகிறார். உள்ளூர்மயமாக்கலே தேவை என நம்மாழ்வார் முன் வைக்கிறார். செல்லும் இடமெல்லாம் மருந்தில்லா மருத்துவம் பற்றி நம்மாழ்வார் பேசினார். சித்த மருத்துவத்தின் தனித்துவத்தை தொ. பரமசிவன் எடுத்துக் கூறியுள்ளார்.  மரபறிவை குறி வைத்து தாக்கிய உலகமயமாக்கலை இவ்விருவரும் தத்தம் வழிகளில் கடுமையாக எதிர்த்து வந்திருக்கிறார்கள். தொ. பரமசிவன் அவர்களை அறிஞர் என அடைமொழியிட்டு அழைப்பது சில நண்பர்களுக்கு கசக்கிறது. அதே போல நம்மாழ்வார் ஐயாவை வேளாண் விஞ்ஞானி என அழைப்பதுவும் ஒரு சாராருக்கு கசக்கிறது. 94 இல் உலகமயமாக்கலினால் பண்பாட்டு ரீதியாக மக்களுக்கு என்ன கேடு வருமென்றும், உழவர்கள...

ஓஷோ

ஓஷோவை புரிந்து கொள்ள உதவும் அற்புத பதிவு : ஓஷோவின் 22 கட்டளைகள் .... . 1.இது அப்படி ஒரு சிறிய வாழ்வு. ஆபத்துகளை தேர்ந்தெடுங்கள்,சூதாடுபவனாக இருங்கள். நீங்கள் எதை இழக்க முடியும்? நாம் வெறுங்கையுடன் வந்தோம், நாம் வெறுங்கையுடன் போகிறோம். கொஞ்ச நேரம் விளையாட்டாய் இருக்க, ஒர் அழகான பாடலை பாட, அவ்வளவுதான் முடிந்துவிடும் காலம். ஆகவே ஒவ்வொரு கணமும் மிகவும் மதிப்பு மிக்கது. . 2. உலகத்தை துறந்து விடுங்கள் என்று எல்லா மதங்களும் கற்பிக்கின்றன. உலகத்தை மாற்றுங்கள் என்று நான் கற்பிக்கிறேன். . 3. உங்களது பிரச்சனை இந்த உலகமல்ல, உங்களது பிரச்சனை உங்களின் விழிப்புணர்வுயின்மையே. உங்களின் விழிப்புணர்வுயின்மையை துறந்து விடுங்கள், உலகத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். . 4. உங்களது வாழ்விலுள்ள சகல நஞ்சுகளுக்கும் தியானமே நச்சு முறிவு. அதுவே உங்களது ஆதார இயல்பை வளமாக்கும் சத்துமாகும். . 5. மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த பூசாரிகள் கண்டுபிடித்த மிக பழமையான ஒரு தந்திரமே குற்றவுணர்வு. அவர்கள் குற்றவுணர்வை உங்களிடம் ஏற்படுத்துகிறார்கள். அவர்கள் மடத்தனமான நீங்கள் நிறைவேற்ற முடியாத கருத்துகளை உங்களுக்கு கொடுக்கிறார்கள். அதன...

நாத்திகம்

நாத்திகம்   நாத்திகம் என்பது கர்ப்பம் மாதிரி.  ஒன்னு கர்ப்பாமா இருக்கனும் இல்லை கர்ப்பமா இல்லாம இருக்கனும்.  சும்மா இந்த "ஆரிய கடவுள் நம்பிக்கை இல்லை  ஆனா "நாட்டார் தெய்வ வலிபாடு" எல்லாம் சமத்துவத்த சொல்லுதுனு கதை சொல்றவனுங்கள ஒரு நாள் மூஞ்சியிலியே ஒரு குத்து வைக்க போறேன். ஒழுங்கா அடிமைப்படுத்தும் குலதெய்வங்கள் புத்தகத்தை படிச்சுட்டு வாங்க என்னமா ரீல் விடுறானுங்க இந்த முகநூல் பொய்யாளிகள். 1.குலதெய்வங்கள் அழியாமல் அக மண முறை அழியாது. இந்து மதத்தையும் சாதியையும் காப்பது நாட்டார் தெய்வங்களே. 2.சாதிக் கொரு குலதெய்வங்களும், தீண்டாமையும் இங்கும் உள்ளது. கொங்கு/பள்ளர்/வன்னியர்/பறையர்/அருந்ததியர்கள்க்கு என பிரித்து இதிலும் தீண்டாமை இருக்கு. 3.பெரும்பாலும் ஆதிக்க ஜாதியினர் ஒடுக்கபட்டவர்களின் குலதெய்வக் கோவில்களுக்கு போவதில்லை/ ஒடுக்கப்பட்டவர்களை ஆதிக்க ஜாதியினர் கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. 4. தீண்டாமை சட்டம் புத்தகங்களில்தான் எழுதியிருக்கு இன்றளவும் அந்த புத்தகங்களில் குறிப்பிட்ட இடங்களில் தீண்டாமை நிகழ்வதாகவும் அதை நம்பிக்கையில்லையானால் நேரில் போய் விசாரித்துக் கொள்ளுமாறு ...