Posts

Showing posts from December, 2020

கணிதப் புதிர்கள்

Image
நான் படித்துக் கொண்டிருந்த காலத்தில், எனக்கு கணக்கு பாடத்தில் அதிக ஆர்வம் இருந்தது... அது எனது தந்தையார் கொடுத்த ஊக்கத்தால் என்றுக்கூட சொல்லலாம்... கல்லூரில் பி.எஸ்சி கணிதம் தான் பயின்றேன்....இதற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு, ஆங்கிலம் எனக்கு அறவே வரவில்லை...கணித பாடம் எடுத்தால் ஒரளவுக்கேனும் தப்பித்து கொள்ளலாம் என்றுதான் கணிதம் எடுத்தேன்... கணிதப்பாடம் எனக்கு கொஞ்சம் கூட கடினமாய் இருந்ததில்லை.... ஆனால், பல கணித பிரிவுகள் எதற்கு படிக்கிறோம் ஏன் படிக்கிறோம் என்ன பயன்பாடு என்று புரியாமல் தான் படித்தேன்... குறிப்பாக மேட்ரிக்ஸ் எனும் கணிதப்பிரிவு எதற்கெ என்றே புரியவில்லை....ஆனால் அது எளிதானது.... கணக்கின் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட எனது தந்தையார் ஒரு முக்கிய காரணம்.... வீட்டில் விடுமுறை காலங்களில் பிள்ளைகள் ஏதேனும் உபயோகமாக பொழுதை போக்கட்டும் என்று சில கணித புதிர்களை கொடுப்பார் (விடுமுறை நாட்கள் வெளியில் சென்று ஏதேனும் கற்க அப்போது எங்களுக்கு போதிய வசதி வாய்ப்புகள் இல்லை) .... காலையில் வேலைக்கு செல்லும் போது   ஒரு கணித புதிரை சொல்வார் அதற்கு நான், மாலை எனது அப்பா வருவதற்குள் வி...