Posts

Showing posts from August, 2020

பெளத்தமும் விநாயகனும்

சங்க இலக்கியத்திலோ சிலப்பதிகாரத்திலோ விநாயகரைப் பற்றி ஒரு சொல் இல்லை. தமிழகத்தின் மிகப்பழைய விநாயகரான பிள்ளையார்பட்டி தேசிகவிநாயகர் (பல தேசங்களுக்கும் சென்று வர்த்தகம் செய்வோர் தேசிகர். அநேகமாக இன்றைய மகாராட்டிரப் பகுதியிலிருந்து விநாயகர் வழிபாட்டை தேசிகர்கள் கொண்டு வந்திருக்க வேண்டும்) கூட நான்காம் நூற்றாண்டளவினதான புடைப்புச் சிற்பம் தானாம். அதிலும் கூட யானைக்கான கூறுகளே அதிகம் என்கிறார் பேரா.தொ.பரமசிவன்.  பரஞ்சோதியார் வாதாபியைத் தீக்கிரையாக்கி வெற்றிச் சின்னமாகக் கொண்டுவந்து காஞ்சியில் நிறுவிய வாதாபி கணபதியும் மிகப்பழைய விநாயகர் என்கிறார்கள். எதைக் கொண்டு வந்து வைத்தாலும் பஜனை பாட ஒரு கூட்டம் இங்கே உண்டு. "வாதாபி கணபதிம் பஜே" என்ற ஒரு பிரபலமான கீர்த்தனை உண்டு. புத்தர் கடவுளாக்கப்பட்ட பிறகு அவரது பிறப்பை விதந்தோதும் கதைகள் பிறந்தன. அதிலொன்று அவரது தாயார் மாயாதேவியின் வயிற்றில் அவலோகிதரான போதிசத்துவர் ஒரு வெள்ளையானை வடிவில் வந்து கருவாகத் தங்கினார் என்கிறது. இதன் காரணமாக, புத்தம் தழைத்தோங்கிய காலத்தில், அரசமரத்தடியில் யானைச் சிலையை நிறுவி வழிபடும் வழக்கம் இருந்ததாக வரலாற்று ஆ...

தமிழ் நாள்காட்டி

 மரபு வழித் தமிழ்த் தேசியத் தக்கார் அவையம்-201514-ஆம் பதிவு நாள்: 04.11.2015 பெருந்தச்சு நிழல் நாள்காட்டியின்படி இவ்வாண்டின் 11-வது முழுநிலவு வியப்பிலும் வியப்பை ஏற்படுத்தி வெற்றிபெற்ற நிலவாக 27.10.2015 அன்று கடந்தது. கடந்த ஆண்டில் இல்லாத புதுமையாகத் தொடர் சரிவிலிருந்து முறை மீண்ட நிலவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. வழக்கம் போல 29 நாட்களில் வந்து விடும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் 28-ஆம் நாள் முக்கால் வட்டமாக இருந்த நிலவு 29-ம் நாளில் முழு வட்டமாக விரைந்து வளர்ந்து விட்டது. ஆயினும் நள்ளிரவு 11.17-க்கு உச்சி வானைக் கடந்து விட்டது. இது முழு நிலவுக்கு முதல் நாளின் அறிகுறியாகும். 27.10.2015 அன்று நள்ளிரவு 12.14-க்குத் தெளிவாகக் கடந்தது. விடியும் வரை தாக்குப் பிடித்தது. மழை பெய்தபடியால் முன்னிரவைக் கணிக்க இயலவில்லை. இவ்வாண்டில் தஞ்சையில் இருந்து கணித்த அளவில் மழையினால் கணிப்புத் தடைபட்ட முதல் நிலவே 11-வது முழு நிலவுதான் என்பது குறிப்பிடத் தக்கது. மீண்டது எப்படி? வழக்கமாகத் தை முதல் நாளே மீண்டு எழும் நிலவாகத் தோன்றிய அண்மை ஆண்டுகளில், அதற்கு முன்பான சரிவுத் திங்களில் நிலவு மீண்டெழுவ...

சாப்பிடும் முறைகள்

சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறது. சாதம் எப்படி சாப்பிடவேண்டும்? சாதத்தை எப்படி சாப்பிடுகிறோம் என்பதில்தான் நல்ல உடல் நலத்துக்கான சூட்சமம் இருக்கிறதாம். தமிழ் நாட்டில் அதிக அளவில் சர்க்கரை நோய் இருப்பதற்கு காரணம் தினமும் அரிசி சாதம் சாப்பிடுவது என்று பலரும் சொல்கிறார்கள். அது தவறு. அதை எப்படி சாப்பிடுகிறோம் என்பது தான் முக்கியம். பலரும் இன்று குக்கரில் வேகவைத்த சாதம் சாப்பிடுகிறார்கள்.  கஞ்சியை வடிக்காமல் சாதம் சாப்பிடுவதால் தான் நீரிழிவு ஏற்படுகிறது. சாதம் வடித்த கஞ்சி சூடாக இருக்கும்போது சிறிது உப்பைப்போட்டு பருகினால் கண் எரிச்சல், பித்தம் ஆகியவை அகலும்.   அதுவே கஞ்சி ஆறிப்போய் குடித்தால் வாயுவை ஏற்படுத்தும். சாதம் உலையில் கொதிக்கும் போதே கஞ்சியை எடுத்துப்பருகினால் நீர்க்கடுப்பை நீக்கும். கொதிக்கக்கொதிக்க சோறு சாப்பிடக்கூடாது. மிதமான சூட்டிலேயே சாப்பிட வேண்டும். அதே நேரம் சில்லென்று ஆறிப்போய் சாப்பிட்டால் கீல் வாதம், மூட்டு வாதத்தை ஏற்படுத்தும். பழையமுது சாப்பிட்டுத்தான் நம் முன்னோர் நல்லதெம்புடனும் ஆரோக்கியத்துடனும் வாழ்ந்தார்கள...

அலைபேசி எண்கள்

எளிதில் கிடைக்காத அலைபேசி எண்கள்.. உங்களுக்காக சுவடு மின்னிதழ் வழங்குகிறது..!! அலைபேசியில் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்..! உதவிகரமாக இருக்கும்..!! சேமித்து வைத்துக் கொள்ளுங்கள்..  1. *முதலமைச்சர்*  எடப்பாடி பழனிச்சாமி. *9443146857*. 2. *துணை முதல்வர்*  O. பன்னீர்செல்வம்.  *9655109251. 9843038848*.  3. *பள்ளி கல்வித்துறை அமைச்சர்* K.A. செங்கோட்டையன் *9442621215. 9443092275*. 4. *கூட்டுறவு துறை அமைச்சர்*  செல்லூர் ராஜு *9443927555*. 5. *மின்சாரத்துறை அமைச்சர்* பி.தங்கமணி *9842740154*. 6. *சட்டத்துறை அமைச்சர்* சி.வி.சண்முகம். *9443326779*. 7. *தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர்* மா.பா.க.பாண்டியராஜன்  *9840879559*. 8. *வருவாய்த்துறை அமைச்சர்* R.P. உதயகுமார் *9943911169*. 9. *ஆதி-திரவிடர் நலத்துறை அமைச்சர்* V.M.ராஜலட்சுமி *9791561576* 10. *BC மற்றும் சிறுபாண்மை பிரிவு அமைச்சர்* S.வளர்மதி . *9842470989*. 11. *சமூக நலத்துறை அமைச்சர்*  V .சரோஜா *9340032299*. *9344772869.* 12. *சுகாதாரத்துறை அமைச்சர்* C. விஜயபாஸ்கர் *9894662211*. 13. *வேளாண்மை துறை அமைசசர்* R...

கவனச் சிதறல்

🤍 *கவனச்சிதறல்*  🤍 *ஒரு விடயத்தில் முழுவதுமாக கவனம் செலுத்துவதில் உங்களுக்கு சிக்கலாக உள்ளதா?* *சமூக ஊடகங்களால் உங்கள் கவனம் எளிதில் திசைதிருப்பபடுகிறதா?* ஆம் எனில் உங்கள் பிரச்சனை கவனம் இல்லாமை மற்றும் கவனம் செலுத்த விருப்பமில்லாமை. இதற்காக கவலைப்பட வேண்டாம். இது பிறக்கும் போதே வரும் கலையல்ல மாறாக ஒருவர் தன் முயற்சியால் வளர்க்கும் கலை. இந்தப் பதிலில் உங்கள் மனதை எப்படி அலைபாயாமல் நீண்ட நேரம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை கூறுகிறேன். *கவனம் என்றால் என்ன?* ஒரு பணியை செய்யும் பொழுது நம் முழு கவனமும் அப்பணியில் இருப்பதை கவனம் எனலாம். *கவனத்தின் தேவை என்ன?* நம்மால் கவனம் செலுத்த முடியுமாயின், நாம் பெரும்பாலான மக்களை விட நம்ப முடியாத அளவிற்கு நன்மையை(advantage) பெற முடியும். முடிவில்லாத கவனச்சிதறல் மிகுந்த இந்த உலகில், ஒரு விடயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நபர் மற்ற அனைவரையும் விட ஒரு படி முன்னாள் நிற்பார். அதுவும் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் நம் கவனச்சிதறல்களை செயல் திறன் மிக்கவவைகளாக மாற்றிவிடுகிறது. நாமும் அதற்கு அடிமையாகி விட்டதால் மீண்டும் மீண்டும் ...

கொரானா

*டாக்டர் ஹாஜி S.முபாரக்அலி .* *அவசரகால மருந்தாளும் மருத்துவர்* *காவேரி மருத்துவமனை திருச்சி.* “””””””””””””””””””””””””””””””” கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏற்கனவே இரத்த சர்க்கரை நோய், இரத்த அழுத்தம்,இதய நோய்களுக்கு மருந்துகளை எடுத்துக் கொண்டு வரும் 52 வயது நபர் நோய் தொற்று உறுதி செய்ய பட்டு முதல் இரண்டு நாட்கள் வீட்டில் இருந்து விட்டு ( home quarantine)3 வது நாள் மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4வது நாள் இறந்துவிட்டார். அவரது உறவினர் ஒருவரிடம் இவ்வளவு பிரச்சினைகள்(இதய நோய், இரத்த சர்க்கரை நோய்.உயர்இரத்த அழுத்தம்) இருக்கும் போது ஏன் அவரை முதலிலேயே மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் இருக்க முடிவெடுத்தீங்கனு நான் கேட்டதற்கு அவர் கூறிய பதில் "கொரோனாவுக்குதான் இன்னும் மருந்தே கண்டுபுடிக்கலயாமே.அங்க போறவங்களுக்கு ரெண்டு சத்து மாத்திரையை கொடுத்துட்டு மூணு வேளை சாப்பாடு போட்டு 10 நாள் சும்மா தான் இருக்கவைச்சுட்டுதான் வீட்டுக்கு அனுப்பி வைப்பாங்கனு எல்லாரும் சொன்னாங்க . அதான் வீட்டுலயே இருக்கட்டும்னு முடிவு பண்ணுவோம்". நிற்க.. கொரோனா நோய்க்கு மருந்துகள் இல்லைய...

தாய்மொழி வழிக் கல்வி

"நான் ஏன் அறிவியலை தாய்மொழியில் கற்கவேண்டும் என்று கூறுகிறேன் என்பதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைத்தார். ஒன்று இளம் வயது வரை தாய்மொழியில் அறிவியலைக் கற்கும்போதுதான் அறிவியலை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். போலந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தாய்மொழியில்தான் அறிவியலைக் கற்பிக் கிறார்கள். இரண்டாவது இந்திய மக்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள். அந்தவகையில் இந்தியாவின் அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் வெறும் 5% மாணவர்கள்தான் படிக்கிறார்கள். மீதம் 95% மாணவர்கள் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பயிலுகிறார்கள். இந்த 95% மாணவர்களுக்கும் தரமான அறிவியல் கல்வியை அளிக்க வேண்டுமென்றால் அது அவரவர் தாய்மொழியிலே அளிக்க வேண்டும். அப்போதுதான் சரியான அறிவியல் வளர்ச்சி சாத்தியமாகும்." -வெங்கி இராமகிருஷ்ணன் (வேதியியல் பிரிவு நோபல் பரிசு 2009)... . 👆 வெங்கி இராமகிருஷ்ணன் இந்திய ஒன்றியத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்து 3 வயதில் குஜராத்திற்கு குடிபெயர்ந்து 17 வயதிற்குப் பின் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று அந்நாட்டின் குடிமகனாக வாழ்பவர்!கடந்த ஆண்டு ச...

உணவே மருந்து

வெப்பம்+இல்லை வேப்பிலை! உடல் வெப்பத்தை இல்லையென்றாக்கும் வேப்பிலை! கரு+வெப்பம்+இல்லை கருவேப்பிலை! கருப்பை வெப்பத்தை இல்லையென்றாக்கும் கருவேப்பிலை! அகம்+தீ−அகத்தீ உடலின் உள்ளே அகத்தின் தீயைக் குறைக்கும் அகத்தி! சீர்+அகம்−சீரகம் அகத்தின் சூட்டைச் சீராக்கும் சீரகம்! காயமே இது பொய்யடா−வெறும் காற்றடைத்த பையடா! காயத்தின் காற்றை வெளியேற்றும் பெருங்காயம்! வெம்மை+காயம்−வெங்காயம் உடலின் வெம்மையைப் போக்கும் வெங்காயம்! பொன்+ஆம்+காண்+நீ பொன்னாங்கண்ணி! உண்டால் உடல் பொன் ஆகும் காண்நீ! கரிசல்+ஆம்+காண்+நீ கரிசலாங்கண்ணி காய்ச்சிய எண்ணெய் கூந்தலைக் கரிசலாக்கும் காண் நீ! சொற்களுக்குள்ளே மருத்துவம் வைத்தான்! நம் மகத்தான பாட்டன்! தமிழ்ச் சொற்களை மறந்தோம்! நம் மருத்துவம் மறந்தோம்! சொன்ன பாட்டியை மறந்தோம்! பாட்டனை மறந்தோம்! மனிதக் கிருமி மறந்த மருத்துவம்! மனிதக் கிருமி மறுத்த மருத்துவம்! மனிதக் கிருமி அழித்த மருத்துவம்! மனிதனை அழிக்கும்  கிருமியால் உயிர்த்தது... இது இயற்கையின் வெற்றி...! என் இனத்தின் வெற்றி...!

தமிழின் பெருமை

தெரிந்துகொள்வோம் தமிழர்களே வணக்கம். 1.நற்றிணை 2.குறுந்தொகை 3.ஐங்குறுநூறு 4.அகநானூறு 5.புறநானூறு 6.பதிற்றுப்பத்து 7.பரிபாடல் 8.கலித்தொகை என்னும் எட்டுத்தொகை சங்க நூல்கள்..... ! 1.திருமுருகாற்றுப்படை 2.சிறுபாணாற்றுப்படை 3.பெரும்பாணாற்றுப்படை 4.பொருநராற்றுப்படை 5.முல்லைப்பாட்டு 6.மதுரைக்காஞ்சி 7.நெடுநல்வாடை 8.குறிஞ்சிப் பாட்டு 9.பட்டினப்பாலை 10.மலைபடுகடாம் என்னும் பத்துப்பாட்டு சங்க நூல்கள்....!! உலகினர் வியந்து போற்றும் 1.திருக்குறள் 2.நாலடியார் 3.நான்மணிக்கடிகை 4.இன்னாநாற்பது 5.இனியவை நாற்பது 6.கார் நாற்பது 7.களவழி நாற்பது 8.ஐந்திணை ஐம்பது 9.திணைமொழி ஐம்பது 10.ஐந்திணை எழுபது 11.திணைமாலை நூற்றைம்பது 12.திரிகடுகம் 13.ஆசாரக்கோவை 14.பழமொழி 15.சிறுபஞ்சமூலம் 16.முதுமொழிக் காஞ்சி 17.ஏலாதி 18.கைந்நிலை என்னும் பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்.....!!! 1.சிலப்பதிகாரம் 2.மணிமேகலை 3.சீவக சிந்தாமணி போன்ற 5பெரும் காப்பியங்கள்..... !!!! 1.அகத்தியம் 2.இறையனார் களவியல் உரை 3.புறப்பொருள்வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள்.....!!!!! 1.தேவாரம் 2.திருவாசகம் 3.திருப்பாவை 4.திருவெம்பா...