புத்தருக்கும் நாமம்

பூமியில் ஆதி முதல் அந்தம் வரை நிகழும் மாற்றங்களை நமது முன்னோர் பதிவு செய்துள்ளனர். அதை வைணவம் தனது மத வளர்ச்சிக்கு விஷ்ணுவின் அவதாரமாக பொருந்தாக் கதைகளைச் சொல்லியது, ஒவ்வொரு அவதாரமும் ஒவ்வொரு யுகத்தில் நடந்ததாக கூறப்படும் கதையில் பலராமனும் கிருஷ்ணனும் ஒரே கதையில் வருகின்றனர். பரசுராமனும் மஹாபாரதத்தில் வருகிறார்.
ஆயர் குல பலராமருக்கு ஏர்கலப்பை எதற்கு?. தொன்மைச்சான்றாக கி.பி 4ம் நூற்றாண்டின் விஷ்ணுபுராணத்தில் 9ம் இடத்தில் கிருஷ்ணனை தவிர்த்து புத்தரே சொல்லப்படுகிறார். 6ம் நூற்றாண்டின் பல்லவ கவெட்டிலும் 9ம் இடம் புத்தருக்கே, ஆந்திராவில் சாளுக்கிய கால தசாவதார புடைப்புச்சிற்பத் தொகுதியிலும் புத்தருக்கே இடம், சில்பரத்னம் எனும் சிற்பநூலிலும் புத்தரின் த்யான சுலோகமே கூறப்பட்டுள்ளது. நாமம் போட்டு வைணவத்தில் சேர்ப்பது புரட்டு வேலை, நாமம் நமக்கு போடமுயற்சிக்கின்றனர்

Comments