Posts

Showing posts from October, 2020

நீ நான்

* *நீங்கள் சிந்திப்பது*   *உங்களுடைய** *சிந்தனையா?...திணிப்பா* ?...*  ஒரு கோட் சூட் போட்ட டிப் டாப் டீசன்ட் ஆசாமி ரோட்டில் ஒரு இடத்தில காரை நிறுத்தி விட்டு ஒரு பெட்டி கடையில் சிகரெட் வாங்கி அடிக்கிறார் என்று வைத்து கொள்ளுங்கள் . அவரை நீங்கள் எப்படி பார்ப்பீர்கள்?. இதில் பார்க்க என்ன இருக்கு ..  நல்லா ஸ்டைலா கம்பீரமா சிகரெட் ஊதரார் அவ்ளோ தான் எனலாம். சரி இப்போ அதே ஆசாமி பெட்டி கடையில் ஒரு கடலை மிட்டாய் வாங்கி பகிரங்கமாய் ரோட்டில் சாப்பிட்டு கொண்டு வருகிறார் என்று வைத்து கொள்ளுவோம். அவரை ஒரு காமெடி பீஸ் போல ..அரை கிறுக்கன் போல பார்ப்போமா இல்லையா.. இப்போ சிந்தித்து பாருங்கள் கடலை மிட்டாய் சிகரெட்டை விட எந்த விதத்தில் தாழ்ந்தது? டாக்டர்கள் தினம் சாப்பிட சொல்லி சிபாரிசு செய்வது கடலை மிட்டாய். அதே டாக்டர் நிறுத்த சொல்லி அட்வைஸ் பண்ணுவது சிகரெட். அப்படி இருக்கையில் சிகரெட் அடிப்பவனை பந்தாவாகவும் கடலை மிட்டாய் சாப்பிடுபவனை தாழ்ந்தவனாக பார்க்கும் அந்த சிந்தனை இருக்கிறதே... அது உங்கள் சிந்தனை அல்ல உங்களிடம் திட்டமிட்டு பெரும் மல்டி நேஷனல் கம்பெனி பெரும் முதலாளிகளால் செலுத்த பட...