*25 வயதிற்குள் வாழ்க்கை முடிந்துவிட்டதா ?* புத்தருக்கு எப்படி போதி மரமோ, ஆண்களுக்கு 25 வயது… பெருவாரியான ஆண்கள் 25 வயதில் முக்தி நிலையை அடைந்து விடுகிறார்கள். அதுதான் முதிர்ச்சி என்ற ஓர் ஆகச் சிறந்த பொக்கிஷம். இதுநாள்வரை இளமைத் துடிப்பில் தான் செய்த தவறுகளின் பிரதிபலனாக, 24லிருந்து 26 வயதிற்குள் அனைத்து ஆண்களும் அன்னப் பறவைகளாக மாறுகின்றனர். அதுதான் தன் வாழ்விற்கு எது தேவை, தேவை இல்லை என்பதனை வகைப் பிரிக்கும் தந்திரம். இதில் தனது இருபதுவயதுகளில் இளைஞர்கள் (ஆண்களும் பெண்களும்) கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டியதாக நான் நினைப்பது, *எடுத்துக்காட்டுகளின் பின்னால் ஓட வேண்டாம் என்பதேயாகும்.* நமது வீடு, சமூகம், சமூக வலைதளங்கள், வேலை செய்யுமிடம் என எங்கு பார்த்தாலும் ஆயிரம் எடுத்துக்காட்டுகளை மேற்கோள் காட்டி பதிலளிக்கும் கலாச்சாரம் அதிகமாக உள்ளது. இதற்கு எடுத்துக்காட்டாக ஒரு சிலவற்றை நான் கூறுகிறேன். பில்கேட்ஸ் சாதித்தார், நீயும் சாதிக்கலாம். ஜாக் மா சாதித்தார், நீயும் சாதிக்கலாம். KFC நிறுவனர் 60 வயதில் சாதித்தார், நீயும் எந்த வயதில் வேண்டுமானாலும் சாதிக்கலாம். ஆண்கள் பெண்களை அடக்குமுறை செய்...