தாய்மொழி வழிக் கல்வி
"நான் ஏன் அறிவியலை தாய்மொழியில் கற்கவேண்டும் என்று கூறுகிறேன் என்பதற்கு இரண்டு காரணங்களை அவர் முன்வைத்தார். ஒன்று இளம் வயது வரை தாய்மொழியில் அறிவியலைக் கற்கும்போதுதான் அறிவியலை ஆழமாக புரிந்துகொள்ள முடியும். போலந்து, ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தாய்மொழியில்தான் அறிவியலைக் கற்பிக் கிறார்கள். இரண்டாவது இந்திய மக்களில் மிகக் குறைந்த சதவிகிதத்தினர்தான் ஆங்கிலப் புலமை பெற்றவர்கள். அந்தவகையில் இந்தியாவின் அறிவியல் உயர்கல்வி ஆராய்ச்சி நிலையங்களில் வெறும் 5% மாணவர்கள்தான் படிக்கிறார்கள்.
மீதம் 95% மாணவர்கள் மாநிலங்கள் நடத்தும் கல்வி நிலையங்களில் பயிலுகிறார்கள். இந்த 95% மாணவர்களுக்கும் தரமான அறிவியல் கல்வியை அளிக்க வேண்டுமென்றால் அது அவரவர் தாய்மொழியிலே அளிக்க வேண்டும். அப்போதுதான் சரியான அறிவியல் வளர்ச்சி சாத்தியமாகும்."
-வெங்கி இராமகிருஷ்ணன் (வேதியியல் பிரிவு நோபல் பரிசு 2009)...
.
👆 வெங்கி இராமகிருஷ்ணன் இந்திய ஒன்றியத்திலுள்ள சிதம்பரத்தில் பிறந்து 3 வயதில் குஜராத்திற்கு குடிபெயர்ந்து 17 வயதிற்குப் பின் உயர்கல்விக்காக அமெரிக்கா சென்று அந்நாட்டின் குடிமகனாக வாழ்பவர்!கடந்த ஆண்டு சென்னை வந்திருந்த போது "இந்தியாவில் அறிவியலை மேம்படுத்தும் வழிகள்" என்ற தலைப்பில் தனது கருத்துகளைப் பிரதம அமைச்சரின் அறிவியல் ஆலோசகரோடு விவாதித்ததில் ஒன்றுதான் 👆👆
Comments
Post a Comment