கவனச் சிதறல்
🤍 *கவனச்சிதறல்* 🤍
*ஒரு விடயத்தில் முழுவதுமாக கவனம் செலுத்துவதில் உங்களுக்கு சிக்கலாக உள்ளதா?*
*சமூக ஊடகங்களால் உங்கள் கவனம் எளிதில் திசைதிருப்பபடுகிறதா?*
ஆம் எனில் உங்கள் பிரச்சனை கவனம் இல்லாமை மற்றும் கவனம் செலுத்த விருப்பமில்லாமை. இதற்காக கவலைப்பட வேண்டாம். இது பிறக்கும் போதே வரும் கலையல்ல மாறாக ஒருவர் தன் முயற்சியால் வளர்க்கும் கலை.
இந்தப் பதிலில் உங்கள் மனதை எப்படி அலைபாயாமல் நீண்ட நேரம் ஒரு விடயத்தில் கவனம் செலுத்துவது எப்படி என்பதை கூறுகிறேன்.
*கவனம் என்றால் என்ன?*
ஒரு பணியை செய்யும் பொழுது நம் முழு கவனமும் அப்பணியில் இருப்பதை கவனம் எனலாம்.
*கவனத்தின் தேவை என்ன?*
நம்மால் கவனம் செலுத்த முடியுமாயின், நாம் பெரும்பாலான மக்களை விட நம்ப முடியாத அளவிற்கு நன்மையை(advantage) பெற முடியும். முடிவில்லாத கவனச்சிதறல் மிகுந்த இந்த உலகில், ஒரு விடயத்தில் அதிக நேரம் கவனம் செலுத்தக் கூடிய ஒரு நபர் மற்ற அனைவரையும் விட ஒரு படி முன்னாள் நிற்பார்.
அதுவும் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் நம் கவனச்சிதறல்களை செயல் திறன் மிக்கவவைகளாக மாற்றிவிடுகிறது. நாமும் அதற்கு அடிமையாகி விட்டதால் மீண்டும் மீண்டும் கவனச்சிதறல்களை நோக்கியே செல்கிறோம்.
நம் கவனமின்மைக்கு காரணம், நாம் கவனம் செலுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை. நாம் கவனகிதறல்களை விரும்புகிறோம். அதையே நாடுகிறோம். இந்த வாக்கியம் சிலரை ஆச்சரிய பட வைக்கும். ஆனால் அது தான் உண்மை.
நம் உடல் மனம் இரண்டும் ஒரே வேலையை செய்தால் அதை கவனம் எனலாம். கவனம் என்பது ஒருமையில் செய்ய வேண்டிய ஒரு விடயம். அங்கே பன்மைக்கு வேலையில்லை. பல பணிகளை ஒரே நேரத்தில் செய்வதை நாம் பெரிதாக கருதுகிறோம். ஆனால் மிக பெரிய கவனச்சிதறல்களுக்கு காரணமே பல்பணி தான்.
நாம் செய்யும் வேலையை முழு திறனோடு செய்ய வேண்டுமானால் அதன் மீது நம் முழு கவனமும் இருந்தால் மட்டுமே முடியும். ஒரு வேலையை செய்யும் பொழுது கைபேசியை பார்த்துக்கொண்டு, இசையை ரசித்துக்கொண்டோ, இணையத்தில் உலாவிக்கொண்டோ செய்தால் ஒரு அர்த்தமுள்ள வேலையை நம்மால் செய்ய முடியாது.
ஒரு விடயத்தில் நீண்ட நேரம் முழு கவனத்தை செலுத்தினால் மட்டுமே அந்த வேலை சிறப்பாக இருக்கும். ஆரம்பத்தில் இது சற்று சிரமமாக தான் இருக்கும். ஏனென்றால் கவனம் செலுத்துவது என்பது மிகவும் சலிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒரு செயல். சலிப்பு ஏற்படுத்தும் எந்த செயலையும் நம் மூளை தவிர்க்கவே பார்க்கும்.
*உங்களை நீங்கள் சற்று வருத்திக்கொள்ள தயாரெனில் மேலும் படிப்பதை தொடரவும்.*
நாம் ஒரு வேலையை செய்யும் பொழுது கவனச்சிதறல்களை குறைக்க சில வழிகள்.
*கவனச்சிதறல் உண்டாக்கும் அனைத்தையும் நீக்குங்கள்*
*கைபேசியை அணைத்துவிடுங்கள்* - Areoplan வேண்டாம். ஏனெனில் சில ஆப்ஸ்-கல் இணையதளம் இல்லையென்றாலும் அறிவிப்புகளை தந்து நம் கவனத்தை திசை திருப்பி விடும்.
*நம் வேலை இடத்தை ஒழுங்கமைத்தல்* - ஒழுங்கீனம் இல்லாத வேலை இடம் நம் மனதை பெரிதும் பாதிக்கும். ஒழுங்கீனம் இல்லாத வேலை இடத்தில வேலை செய்வதால் நம் செயல் திறன் குறைவதாக பல ஆராய்ச்சி கட்டுரைகள் கூறுகின்றன.
*வேலையை துவங்கும் முன்பு ஒரு குவளை தண்ணீர் மற்றும் கொறிக்க சத்தான ஏதோ ஒரு தின்பண்டத்தை எடுத்துக்கொள்ளவும்.* இதற்காக நம் வேலையை விட்டு எழுந்திரிக்க வேண்டிய அவசியம் இல்லை.
*உங்கள் வேலையை ஆரம்பிக்கும் முன்பு ஒரு முறை கழிவறைக்கு சென்றுவிட்டு வருவது மிகவும் நலம்.* ஆத்திரத்தை கூட அடக்கி விடலாம் ஆனால்…….. இது நம் வேளைக்கு இடைஞ்சல் ஏற்படுத்தாமல் பார்த்துக்கொள்ளவே இந்த வழி.
*எதன் மீது கவனம்?*
கவனம் செலுத்துவதை விட நாம் கவனம் செலுத்தும் பணி முக்கியமானதா அல்லது முக்கியமில்லையா என்று தெரிந்து கொண்டு முக்கியமான விடயத்தில் கவனத்தைச் செலுத்தினால் நம் வாழ்க்கை விரைவில் மேம்படும்.
*தியானம்*
தியானம் நம் கவனத்தை பெரிதும் மேம்படுத்தும். தியானத்தின் மூலம் நம் மூளையின் கட்டமைப்பை மாற்றி சிதறல்கள் அல்லாமல் நீண்ட நேரம் ஒரு வேலையில் சலிப்பு ஏற்படாமல் கவனத்தை செலுத்த முடியும்.
*காட்சிப்படுத்தல்*
ஆம் காட்சிப்படுத்துதல் நம் கவனத்தை மேம்படுத்தவும் உதவும். ஏனென்றால் காட்சிப்படுத்தல் நாம் எதன் மீது கவனம் வைக்க வேண்டும் எதன் மீது கவனம் செலுத்தி தேவையில்லை என்பதை நமக்கு பயிற்றுவிக்கிறது.
*தேனீர்*
தேனீர் பிரியரா நீங்கள்? இதோ உங்களுக்கான ஒரு நற்செய்தி. உங்கள் வேலையை துவங்கும் முன்பு ஒரு கப் பால் அல்லாத தேனீரை அருந்துவது உங்கள் மூளையை விழிப்புணர்வுடன் வைக்க உதவும்.
*மூச்சை கவனித்தல்*
எப்பொழுதெல்லாம் உங்களால் கவனம் செலுத்த முடியவில்லை என்று நினைக்கிறீர்களோ அப்பொழுதெல்லாம் ஒரு 5 நிமிடம் உங்கள் கண்களை மூடி உங்கள் கவனத்தை உங்களது மூச்சின் மீது வையுங்கள். இது உங்கள் மூளையை அதன் முழு திறனிற்கு மீண்டும் கொண்டு வந்து விடும்.
Comments
Post a Comment